முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 129.31 மில்லியன் நிதி உதவி..
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு நிலவிய வரட்சி நிவாரணத்திற்காக 27 ஆயிரத்து 868 குடும்பங்களிற்காக 129.31 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
2018ம் ஆண்டின் நடுப் பகுதியில் ஏற்பட்ட வரட்சியின்போது பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களிற்கேற்ப முழுமான நிவாரணம் கிடைத்தது.
இதன் பிரகாரம் உரிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மூலம் விநியோகம் இடம்பெறுகின்றன. இவற்றில் அதிக பட்சமாக கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை
3 ஆயிரத்து 240 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 5 ஆயிரத்து 779 குடும்பங்களும் பெற்றுக்கொள்கின்றனர்.
இதேநேரம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 3 ஆயிரத்து 152 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை
6 ஆயிரத்து 545 குடும்பங்களும் பெற்றுக்கொள்கின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை ஆயிரத்து 101 குடும்பங்களும்
5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை ஆயிரத்து 762 குடும்பங்களும் பெற்றுக்கொள்கின்றனர். இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில்
4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 851 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை ஆயிரத்து 194 குடும்பங்களும் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 494 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 796 குடும்பங்களும் பெற்றுக்கொள்வதோடு
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை ஆயிரத்து 184 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை ஆயிரத்து 820 குடும்பங்களுமாக
மாவட்டத்தில் மொத்தமாக 4 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 10 ஆயிரத்து 22 குடும்பங்களும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை 17 ஆயிரத்து 846 குடும்பங்களும் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 868 குடும்பங்களின் நிவாரணத்திற்காக 12 கோடியே 93 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பெறுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. என்றார்.