மக்களால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்ஸமில்..

ஆசிரியர் - Editor I
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்ஸமில்..

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரான மொஹமட் முஸ்ஸம்மில் பொது மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக மொஹமட் முஸ்ஸமில் நியமிக்கப்பட்டவர்.

அவர் நியமிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் அங்கு சேவை செய்த 7000 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மொஹமட் முஸ்ஸமில்லை அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்ஸமில் அங்கு இருந்து துரத்தியடிக்கும் போது பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடன் தப்பிச் செல்லும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு