SuperTopAds

உலகத்தை கைக்குள் கொண்டுவரும் ரஷ்ய ஹேக்கர்கள்.. பீதியடைந்த அமெரிக்கா.!

ஆசிரியர் - Editor II
உலகத்தை கைக்குள் கொண்டுவரும் ரஷ்ய ஹேக்கர்கள்.. பீதியடைந்த அமெரிக்கா.!

ரஷ்யாவை சேர்ந்த பேன்சி பியர் என்ற ஹேக்கிங் குழு உலகத்தில் பல முக்கிய தொலைக்காட்சி மற்றும் நிறுவனங்களை ஹேக் செய்து இருப்பதாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பேன்சி பியர் ஹேக்கர்கள் ரஷ்யா உளவுப்படை பின்னால் இருந்து இயக்குகிறது. இவர்களின் முக்கிய நோக்கம் உலகத்தையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஏற்கெனவே அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இவர்களின் தலையீடு இருந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜெர்மன், பிரான்ஸ் தேர்தல்களிலும் இவர்களின் தலையீடு இருந்துள்ளது.

இவர்கள் வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் செய்தி சேனல்களின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து அதில் போலியான தகவல்களை பறிமாறி பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்துவர்.

இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் ஜெர்மன் பாதுகாப்புத்துறை ஆராய்ந்து வருகின்றது.