பாலாலி வீதியில் உள்ள தபால் பெட்டிக்கு பூட்டு இல்லை. நம்பி தபால்களை போடும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
பாலாலி வீதியில் உள்ள தபால் பெட்டிக்கு பூட்டு இல்லை. நம்பி தபால்களை போடும் மக்கள்..

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் உள்ள தபால் பெட்டியின் கதவின் பூட்டு வேலை செய்யாத நிலமையினை அறியாது பொது மக்கள் அதனுள் தபாலையிடும்மோதும் தபால்த் திணைக்களம் கண்டுகொள்ளவில்லை. என அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பலாலி வீதியில் கந்தர்மடம் சந்தியில் ஓர் தபால் பெட்டி உள்ளது. அப் பெட்டி இன்றுவரை பயன் பாட்டில் உள்ளது. இவ்வாறு காணப்படும் தபால் பெட்டியில் மக்கள் தபாலையிடும் சந்தர்ப்பத்தில் தபால்த் திணைக்கள ஊழியர்கள் தம்வசம் உள்ள திறப்பினைக்கொண்டு அதனுள் உள்ள தபால்களை எடுத்துச் செல்வது வழமை . 

அதனை நம்பியே மக்கள் தபாலை தபால் பெட்டியில் இடுகின்றனர். இந்த நிலையில் குறித்த தபால் பெட்டியானது பாதுகாப்பு அற்ற முறையில் சாதாரணமாக எவரும் திறந்து சாத்தும் தன்மையுடனேயே கானப்படுகின்றதனால் ஒருவர் இட்டுச் செல்லும் தபாலினை மற்னுமொருவர் எடுத்துச் செல்லும் தன்மையும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே தபால்த் திணைக்களத்தினை நம்பி தபாலிடும் மக்களிற்கான நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் திணைக்களம் உடன் ஆவண செய்ய வேண்டும் . எனக் கோருக்கை விடுக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதித் தபால்மா அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

மேற்படி விடயம் உடன் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவ்வாறு கானப்படின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனப் பதிலளித்தார் 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு