க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவா்களை குழப்பும் வகையில் இசை நிகழ்வு நடத்திய இராணுவம்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவா்களை குழப்பும் வகையில் இசை நிகழ்வு நடத்திய இராணுவம்..

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமினரின் இசை நிகழ்ச்சி காரணமாக அப்பகுதி பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வடமராடசி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நேற்று இரவு தொடக்கம் அதிகாலை வரை இராணுவத்தினர் இசை நிகழ்ச்சியை நடாத்தியுள்ளனர்.

அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பலத்த சத்தத்துடன் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.இதேவேளை கா.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள் நிலையில் 

மாணவர்கள் பரீடசைக்கு செல்லும் முதல் நாளிலேயே அவர்களுக்கு மனஅழுத்தங்களை கொடுக்கும் வகையில் அதிக ஒலியுடன் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளமை மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்த பல தரப்புக்களும் முயற்சி செய்து வருகின்ற நிலையில் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு