வடிகாலில் கலக்க விடப்பட்டுள்ள வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் கழிவு: யாழ்.மாநகரசபை கண்டும் காணாமலிருப்பது ஏன்?

ஆசிரியர் - Admin
வடிகாலில் கலக்க விடப்பட்டுள்ள வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் கழிவு: யாழ்.மாநகரசபை கண்டும் காணாமலிருப்பது ஏன்?

யாழ்.நகரிலுள்ள ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வாகனப் பழுது பார்க்கும் நிலையமொன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வடிகாலில் கலக்க விடப்பட்டுள்ளது.

இதனால்,அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச் சூழலும் மாசடைகின்றது.கழிவு நீர் தேங்கி நிற்பதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் சபை மேற்படி வாகனப் பழுது பார்க்கும் நிலையத்திற்கு அனுமதி வழங்கும் போது சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் கரிசனை செலுத்தாதது ஏன்?

குறித்த வாகனப் பழுது பார்க்கும் நிலையத்திற்கு வியாபார உரிமம் வழங்கிய யாழ்.மாநகரசபை மேற்படி பாதிப்புக்களைக் கண்டும் காணாமலிருப்பது ஏன்? பொறுப்பு வாய்ந்தவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு