கள்ளப்பாடு பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மதிப்பளிப்பு..
முல்லைத்தீவு - கள்ளப்பாடு அ.த.க பாடசாலையில் 2018ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வானது பாடசாலையின் முதல்வர் ந.கருணாகரன் தலைமையில், 2018.11.29 இன்றைய நாள், பாடசாலையின் பிரதான மண்டகத்தில் இடம்பெற்றது.
விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது. தொடர்ந்து இறை வணக்கம், மாணவர்களது கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரைகளென நடைபெற்றது.
அவற்றினையடுத்து இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களான, வி.கவிதரன்(183), மு.தருன்(168), அ.ரிசாந்தன் (168),
சா.சமரவன்(165), ச.நேருசன்(159), வே.தரணிகா(151) ஆகியோர் உட்பட்ட சாதனையாளர்கள் பலர் மதிப்பளிக்கப்பட்டனர். மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், புசுப்பகாந்தன் (உதவிக்கல்விப் பணிப்பாளர்), க.சிவலிங்கம் (ஓய்வு நிலை அதிபர்),
மா.விசயசேகரம் (கள்ளப்பாடு வடக்கு கடற்றொளிலாளர் சங்க தலைவர்), வே.பரமேந்திரம்(நலன்விரும்பி), கள்ளப்பாடு வடக்கு, தெற்கு கிராம உத்தியோகத்தர்கள்,
முன்பள்ளி முதன்மை ஆசிரியர்கள், மாணவர்களது பெற்றோர்களென பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.