யாழ்.ஆரியகுளம் நாக விகாரைக்குள் ஆகம விதிப்படி இந்து ஆலயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகுளம் நாக விகாரைக்குள் ஆகம விதிப்படி இந்து ஆலயம்..

இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாண நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய 

இந்து ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் ஆகியன கட்டி எழுப்பப்பட வேண்டும். உண்மையான பௌத்தர்கள் இவற்றை நேசிப்பதுடன் இவற்றை கட்டியமைப்பதற்காக இதய சுத்தியுடன் உழைக்கின்றார்கள்.

நாம் யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதியாக இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இன நல்லிணக்கத்துக்கான உறவு பாலமாக செயற்பட்டு வருகின்றோம். எமது 

நல்லிணக்க வேலை திட்டத்தின் முக்கிய அம்சமாக நாக விகாரை வளாகத்துக்குள் கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயம் ஒன்றை ஆகம விதி முறைகளுக்கு அமைய நிர்மாணிக்கின்றோம். 

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி உள்ளோம். இந்து - பௌத்த சங்க தலைவர் தர்மலிங்கம் 

லோகேஸ்வரன் போன்ற அன்பர்களும் எமது முயற்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள்.

நாக விகாரைக்குள் ஏற்கனவே பரிவார மூர்த்திகளாக கணபதி, அம்மன், விஷ்ணு, கந்தன் போன்ற இந்து தெய்வங்கள் வைக்கப்பட்டு உள்ளனர். 

அதே போல மிக அண்மையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து உள்ளோம்.என தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு