இறைச்சிக்காக கடத்தப்பட்ட 17 மாடுகள் மீட்பு. மாடு கடத்தலுக்கும் பொலிஸாருக்கும் சம்மந்தம் மக்கள் முணுமுணுப்பு..

ஆசிரியர் - Editor I
இறைச்சிக்காக கடத்தப்பட்ட 17 மாடுகள் மீட்பு. மாடு கடத்தலுக்கும் பொலிஸாருக்கும் சம்மந்தம் மக்கள் முணுமுணுப்பு..

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடந்த சில தினங்களாக இறைச்சி ஆக்குவதற்காக களவாடப்பட்ட 17 பசு மாடுகள் வட்டுக்கோட்டடை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

நவாலி கொத்துக்கட்டி வீதி மாரியம்மன் கோவிலடி வெளியில் அவை மறைவாக அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் பாசு மாகடுகளை மீட்டுள்ளனர். 

குறித்த பகுதியில் வசித்துவரும் ஒருவர் நவாலியில் மாட்டிறச்சி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அவருடைய வீட்டிற்கு பின்னால் உள்ள வெளியில் இரவோடு இரவாக பல மாடுகள் கொண்டுவந்து அடைத்து வைக்கப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ஒரு சிலர் தமது பசு மாட்டினை கானவில்லை என்று கூறி அப்பகுதிக்கு தேடுவதற்கு வந்துள்ளனர். இதன்போது மாரியம்மன் கோவிலடியில் உள்ள வெளியில் தமது மாடுகள் கட்டப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். 

இது குறித்த வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த மாடுகளை அங்கு கட்டிவைத்திருந்த 4 பேரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

மேலும் அங்கு நின்ற 8 மாடுகளை ஏற்றிக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஏனைய மாடுகளை புகைப்படம் எடுத்த பொலிஸார் அந்த பசுமாடுகளின் உரிமையாளர்கள் உள்ளார்கள் என்றும், 

அதனால் அவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்ல தேவை இல்லை என்று கூறி மறைவாக மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். அந்த மாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்வதற்கான அழைக்கப்பட்ட வாகனத்தினையும் தேவை இல்லை என்று கூறி பொலிஸார் அங்கிருந்து அனுப்பிவிட்டனர். 

இருப்பினும் சம்பவ இடத்தில் நின்ற பசுமாடுகளை உரிமை கோரி எந்த பொது மகனும் அங்கு வந்திருக்காத நிலையில் பொலிஸாருடைய இச் செயல் சம்பவ இடத்தில் நின்றவர்களை சந்தேகம் கொள்ளவைத்துள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு