முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிணக்குகளுக்கு சட்டரீதியான தீா்வு குறித்து ஆராய்வு..
முல்லைத்தீவில் காணப்படும் பல்வேறுபட்ட பிணக்குகளுக்கு சட்டரீதியில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்.
மூல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பிணக்குகள்,மற்றும் வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றிற்கு சட்டரீதியில் தீர்வுகாண்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது, 2018.11.22 இன்றைய நாள் முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு, பொதுநோக்கு மண்டகத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும், மாவட்டத்திலுள்ள சமூகங்களின் மத்தியில் நிலவும் ஏனைய
வன்முறைச் சம்பவங்கள், பிணக்குகளுக்கு சட்டரீதியில் எவ்வாறு தீர்வுகாண்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், கரைதுறைப்பற்று
பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், த.அமலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த பொது அமைப்பின் சார்பாளர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.