சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய அரசாங்கம்..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய அரசாங்கம்..

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஓர் கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீண்டகாலமாக விடுத்த கோரிக்கையினை கனேடியத் தூதரகம் நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தவர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கனேடிய நாட்டிலும் அவர்களின் வாரிசுகளாகவும் பலர் கடேடிய நாட்டில் வாழ்வதனால் அவர்களின் நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களின் 

உறவுகளின் நன்மை கருதியும் கனேடியத் தூதரகத்தின் ஒர் துணைத் தூதரகத்தினை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீண்டகாலமாக எழுத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ் விடயம் தொடர்பில் கனேடியத் தூதரகம் விபரங்களை சேகரிப்பது தொடர்பில் அறிந்த சிலர் கனேடியத் தூதரகத்திற்கு தவறான புள்ளிவிபரத்தினை வழங்கியுள்ளனர். 

அதாவது வடக்கு மாகாணத்தின் மக்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே கனேடிய நாட்டில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர். அதாவது இப் புள்ளிவிபரத்தில் இலங்கையர்களிற்கு கனேடிய நாட்டில் பிறந்தவர்களின் புள்ளிவிபரமே 

தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தாலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள்தான் வடக்கினை சேர்ந்தவர்கள் கனடா நாட்டில் வாழ்வதாக சுட்டிக்காட்டப்படுவதும் தவறான புள்ளிவிபரம் எனத் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது இந்தியத் துணைத் தூதரகம் உள்ளது போன்று கனடா , சுவிஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமையப்பெற்றால் குறித்த நாடுகளில் வாழும் 

வடமாகாண மக்களும் வடக்கில் வாழும் அவர்களின் உறவுகளிற்கும் நெருங்கிய உறவைப் பேனுவதோடு பல வீனான அலைச்சலைத் தடுக்க முடியும் . எனக் கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இருப்பினும் குறித்த தவறான தகவலின் பின்னால் சில சக்திவாய்ந்த அமைப்புக்கள் தலையிட்டே கனேடியத் துணைத் தூதரகம் அமைவதனைத் தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு