வடமாகாண கல்வி அமைச்சையும் மதிக்காத பாடசாலை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சையும் மதிக்காத பாடசாலை..

வடமாகாண கல்வி அமைச்சரால் மரபுரிமை மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஸ்தான சி.சி.த.க பாடசாலையின்   பெயர் பலகை  மீண்டும் அதே வடிவத்தில் எழுதி வழங்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட குறித்த பாடசாலையின் கட்டிடத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் சங்கமோ அல்லது பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட எவரது சம்மதமும் இன்றி  

இரகசியமான முறையில் பாடசாலையின் பெயரை இரவோடு இரவாக அழித்து பெயர் மாற்றம் செய்து வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஏற்பாட்டில் மரபுரிமை மையம் என திறந்து வைக்கப்பட்டதோடு  அதற்காக அகற்றப்பட்ட மரங்கள் 

ஆசிரியர்களின் வாகனத் தரிப்பிடத்திற்குள் பாதுகாக்கும் அதே சமயம் ஆசிரியர்கள் மாணவர்களின் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டிகளும் கொட்டும் மழையில் விடும் அவலம் ஏற்பட்டது.

இதேபோன்று உடைந்த ஓடுகள் என்பவற்றினை அகற்றாதமையினால் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாகவும் உள்ளது. 

எனவே இவை அனைத்தையும் உடனடியாக அகற்ற ஆவண செய்யுமாறு கோரி  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாடசாலை சமூகத்தினால் கடந்த மாதம் எழுத்தில் ஓர்  கடிதம் வழங்கப்பட்டது. 

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் வலயத்தின் பதில் கல்விப் பணிப்பாளரிடம்  தொடர்புகொண்டு கேட்டபோது ,

 முறையிடப்பட்டது.  இதனால்  குறித்த மரபுரிமை மையம் அமைப்பதற்கு முத்துதம்பி வித்தியாலயத்தில் உள்ள ஓர் கட்டிடமே சிபார்சு செய்யப்பட்ட நிலையிலும்   இறுதி நேர 

ஏற்பாட்டில் மாகாண கல்வி அமைச்சரால் குறித்த பாடசாலை தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் இதனை சுமூகமாக தீர்க்க  முயன்றதாக பதிலளித்தனர்.

இதன் அடிப்படையில் குறித்த மரபுரிமை மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை மீண்டும் பாடசாலைநின் பெயர் முழுமையாக பொறிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு