தேர்தல் ஆணைக்குழுவுடன் இரகசியமாகப் பேச்சு நடாத்தியுள்ள ஐனாதிபதி..

ஆசிரியர் - Editor I
தேர்தல் ஆணைக்குழுவுடன் இரகசியமாகப் பேச்சு நடாத்தியுள்ள ஐனாதிபதி..

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மற்­றும் உறுப்­பி­னர்­களை இர­க­சி­ய­மா­கச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். 

இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் இந்­தச் சந்­திப்பு இடம்­பெற்­ற­ போ­தும் அது பற்­றிய உத்­தி­யோ­க­பூர்வ விவ­ரங்­கள் எவை­யும் வெளி­யி­டப்­ப­டா­மல் இர­கசியம் பேணப்­ப­டு­கின்­றது. 

உரிய காலப் பகுதி முடி­வ­டை­வ­தற்கு முன்­பா­கப் பொதுத் தேர்­த­லு­டன் சேர்த்து அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லை­யும் நடத்­து­வது குறித்து இந்­தச் சந்­திப்­பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது என்று நம்­ப­க­மான வட்­டா­ரங்­கள் மூலம் அறிய கிடைக்கிறது.

நாட்­டில் எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­க­டிக்கு தேர்­தல் மூலமே தீர்வு காண முடி­யும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தீவி­ர­மாக நம்­பு­கின்­றார். 

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை தனியே நடத்­து­வ­தற்கு எதிர்ப்­புக்­கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­லும், பல தரப்­பு­க­ளும் உயர் நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ள­தா­லும், 

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யும், அரச தலை­வர் தேர்­த­லை­யும் ஒரே நாளில் நடத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறித்து அவர் ஆரா­யத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்.. 

கடந்த மாதம் 26ஆம் திகதி தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்கி, மகிந்த ராஜ­பக்­சவை, மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தார். 

இது அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது என்று தெரி­வித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பதவி நீக்­கத்தை ஏற்க மறுத்­தார். தானே தலைமை அமைச்­சர் என்­றார்.

இதற்­கி­டை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யா­மல் மகிந்த ராஜ­பக்ச தடு­மாறி வரு­கின்­றார். 

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து பொதுத் தேர்­தலை நடத்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால எடுத்த முயற்­சி­யும் பிசு­பி­சுத்­துள்­ளது. 

அரச தலை­வ­ரின் அர­சி­தழ் அறி­விப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­ட­து­டன், அதற்கு இடைக்­கா­லக் கட்­ட­ளை­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இத­னால் அர­சி­யல் நெருக்­கடி மேலும் தீவி­ர­ம­டைந்து செல்­கின்­றது. பொரு­ளா­தார ரீதி­யி­லும் அழுத்­தம் அதி­க­ரித்து வரு­கின்­றது. 

ஐக்­கிய தேசிய முன்­னணி, அரச தலை­வர் தேர்­தலை நடத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தயாரா என்று கடந்த வியா­ழக் கிழமை கொழும்­பில் நடத்­திய மாபெ­ரும் போராட்­டத்­தில் சவால் விடுத்­தி­ருந்­தது. 

இந்த நிலை­யில் அரச தலை­வர் தேர்­த­லை­யும் பொதுத் தேர்­த­லை­யும் ஒரே நாளில் நடத்­து­வது குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரா­யத் தொடங்­கி­யுள்­ளார். 

இரண்டு தேர்­தல்­க­ளை­யும் ஒரே நாளில் வைப்­ப­தற்கு எந்­தச் சட்­டத் தடை­யும் இல்லை என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­னர் அரச தலை­வ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்றும் நம்­ப­க­மாக அறி­யக் கிடைக்கிறது. 

இரண்டு தேர்­தல்­க­ளும் ஒரே நாளில் நடத்­தப்­பட்­டால் அதி­க­ள­வான ஆளணி தேவைப்­ப­டும் என்­ப­தும் அரச தலை­வ­ருக்­குச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு மாத்­தி­ரமே தற்­போ­துள்ள நிலை­யில் நாடா­ளு­மன்­றத்­தின் அனு­மதி தேவை என்று தேர்­தல்­கள் ஆணைக்­குழு கூறி­யுள்­ளது. 

அரச தலை­வர் தேர்­த­லை­யும் பொதுத் தேர்­த­லை­யும் ஒரே நேரத்­தில் நடத்த இணங்­கி­னால், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்­து­வ­தற்­கான மூன்­றில் இரண்டு 

பங்கு பெரும்­பான்மை நாடா­ளு­மன்­றத்தி கிடைக்­க­லாம் என்­றும் அரச தலை­வ­ருக்கு ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு