பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு காலக்கெடு விதிப்பு..

ஆசிரியர் - Editor I
பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு காலக்கெடு விதிப்பு..

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அனைத்திற்கும் ஜனவரி மாதத்திற்கு இடையில் கண்டிப்பாக கட்டண மானி ( மீற்றர் ) பொருத்தப்பட்டே ஆக வேண்டும். என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் பிரதான முச்சக்கர வண்டிகளின் சங்கங்கள் ஐந்தின் நிர்வாகிகள் மாநகர முதல்வர் , பொலிசார் உள்ளிட்டோருக்கிடையில் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மாவட்டச் செயலாளர் மேற்படி தீர்மானத்தை தெரிவித்தார்.

குறித்த விடயம் 2015ம் ஆண்டு முதல் பேசப்பட்டபோதும் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் பயணிகளிற்கும் முச்சக்கர வண்டிச் சாரதிகளிற்கும் இடையில் பல தகராறுகள் மனக் கசப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்த மீற்றரை பொருத்துவதன் மூலம் பயணிகளிற்கும் சாரதிக்குமான நம்பகத் தன்மை அதிகரிக்கும்.

எனவே ஓர் தரமான உற்பத்தியை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பொருத்த வேண்டும். என மாவட்டச் செயலாளர்  கோரிக்கை விடுத்தார்.

குறித்த மீற்றர்களை பொருத்துவதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என்றுமே மறுப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் உரிய வழிகாட்டல் தாமதமே இருந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை பொருத்த ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

2016ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளிற்கு  கட்டண மானிகளைப் பொருத்துவதற்கு இதே மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுத்தபோது மாகாண போக்குவரத்து நியதிச் சட்டத்தின் பிரகாரம் 

குறித்த விடயம் மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் என மாகாண சபை மாவட்டச் செயலாளருக்கு எழுத்தில் கடிதம் அனுப்பியதன் பெயரில் குறித்த பணிக்கான முன்னெடுப்புக்களை மாவட்டச் ணெயலாளர் கைவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு