கோப்பாய் பொலிஸாருடைய அசண்டையீனம். சுதந்திரமாக நடமாடிய திருடர்கள்..

ஆசிரியர் - Editor I
கோப்பாய் பொலிஸாருடைய அசண்டையீனம். சுதந்திரமாக நடமாடிய திருடர்கள்..

திருநெல்வேலிப் பகுதியில் திருடர்களை இனம் கண்டுகொண்ட  இளைஞர்கள் இரவு 10 மணி தொடக்கம் பொலிசாருக்கு தகவல் வழங்கியபோதும் விடியும் வரையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. என குற்றம் சாட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இரு திருடர்கள்  பற்றைக்குள் மறைந்திருப்பதனை அவதானித்த சில இளைஞர்கள் பல முறை பல பொலிசாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் வழங்கினர். 

இந்த நிலையில் 10.30 ஐ தாண்டிய நிலையிலும் எந்தப் பொலிசாரும் அப் பகுதிக்கு வரவே இல்லை.  இந்நிலையில் பற்றைக்குள் மறைந்தி ருந்த  இரு திருடர்களும் வேறு  வழியாக தப்பிச் சென்று  அருகில் உள்ள  வீட்டிற்குள் யன்னலைப் பிரிந்து உட்சென்று சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த கைத் தொலைபேசி ஒன்று , 

சிறுதொகைப் பணம் என்பவற்றுடன் வங்கி அட்டைகளையும் களவாடிய சமயம் வீட்டார் குறித்த அறையின் கதவை திறக்க முயன்றுள்ளனர். அந்த நேரம் அறையின் உள்ளே நின்ற திருடன் கதவினை உட் திசையால் பூட்டியுள்ளான் .

இவ்வாறு திருடன் உட் திசையில் பூட்டியதனை அறியாத வீட்டார். தொடர்ந்தும் கதவினை திறக்கும் முயற்சியில் ஈடுபட திருடன் உடனடியாக பின் வழியாகத் தப்பியோடியுள்ளான். இதன் பின்னரே சந்தேகம் கொண்ட வீட்டார் அயலவர்களின் உதவியை நாடிய சமயமே சம்பவம் வெளித் தெரிந்தது. 

இதன் பின்பும் பொலிசாருக்கும் 119 இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டபோதும் பொலிசார் எவரும் வரவே இல்லை.

இதேபோன்று அருகில் ஓர் வீட்டின் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்களின் இரு பற்றரிகளையும் கழட்டிச் சென்றுள்ளனர்.

குறித்த திருடர்களின் நடமாட்டம் தொடர்பில் அறிவித்தல் வழங்கிய சமயமே பொலிசார் அப் பகுதிக்கு வருகை தந்திருப்பின் திருட்டை தடுத்திருக்கவும் திருடர்களை கையும் மெய்யுமாக பிடித்திருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு