புதிய மீள்குடியேற்ற அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்பு..

ஆசிரியர் - Editor
புதிய மீள்குடியேற்ற அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்பு..

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்   நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்கும் நிகழ்வு இன்று யாழ்.நகரில் இடம்பெற்றது.

யாழ்.வைத்தியசாலை வீதியிலிருந்து ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.போதனாவைத்தியசாலை             முன்றலில் வைத்தியசாலை ஊழியர்களால் மலர்மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ்.பஸ் தரிப்பு நிலைய வீதியூடாக அழைத்து வரப்பட்ட அமைச்சருக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய தொழிற்சங்கத்தினர் கௌரவிப்பு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கஸ்தூரியார் வீதியூடாக அழைத்து வரப்பட்ட அமைச்சரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளுராட்சி         மன்றங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

Radio
×