சங்ககாரா- ஜெயவர்த்தனே சாதனையை முறியடிக்க தவறிய இந்திய ஜோடி
இந்திய வீரர்கள் ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் ஜோடி நேற்றைய டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் பாட்னர்ஷிப் எடுத்த நிலையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை- இந்தியா இடையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதில் இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிக பாட்னர்ஷிப் போட்ட நான்காவது ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின்- கேன் வில்லியம்சன் ஜோடி 171 ஓட்டங்களுடன் (2016) முதலிடத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித்- லூட்ஸ் போஸ்மென் ஜோடி 170 ஓட்டங்களுடன் (2009) இரண்டாமிடத்திலும், இலங்கை ஜாம்பவான்களான சங்ககாரா- ஜெயவர்தனே ஜோடி 166 ஓட்டங்களுடன் (2010) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
சர்மா- ராகுல் ஜோடி இன்னும் இரண்டு ஓட்டங்கள் சேர்ந்து எடுத்திருந்தால், சங்ககாரா- ஜெயவர்தனே சாதனையை முந்தியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.