SuperTopAds

யாழ் புகையிரத நிலைய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் புனரமைப்பு

ஆசிரியர் - Editor II
யாழ் புகையிரத நிலைய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து இன்றையதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வில் யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குடிநீர் சவர்த்தன்மைமிக்கதாக காணப்படும் நிலையில் குறித்த இயந்திரத்தால் புகையிரத நிலையத்திற்கு வருபவர்களும் புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 72வது ஆண்டு பழைய மாணவர்களால் நடத்தப்படும்

தண்ணீர் MHC 72 செயற்றிட்டத்தின் கீழ் குடிநீர் இயந்திரம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.