வடமராட்சி வலய பிரதி கல்வி பணிப்பாளராக ரவீந்திரன் நியமனம்..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி வலய பிரதி கல்வி பணிப்பாளராக ரவீந்திரன் நியமனம்..

வடமராட்சி கல்வி வலயத்திற்கு பதில் கல்விப் பணிப்பாளராக நாளை முதல் ரவீந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி கல்வி வலயத்தின் தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் நந்தகுமாரின் சேவைக்காலம் நவம்பர் 7ம் திகதியுடன் நினைவு பெறுவதனால் குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நிரப்படவேண்டிய நிலையில் உள்ளது.

இந்த வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் தற்போதைய மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் ரவீந்திரன் நியமிக்கப்படுகின்றார். 

இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மன்னார் கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஓய்வு சென்ற நிலையிலும் இரு பதில் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு