ஜனாதிபதியை ஒருமையில் பேசியமைக்காக சுமந்திரன் கைது செய்யப்படுவாா். சமூக வலைத்தளங்களில் ஆருடம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை ஒருமையில் பேசியமைக்காக சுமந்திரன் கைது செய்யப்படுவாா். சமூக வலைத்தளங்களில் ஆருடம்..

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவை ஒருமையில் பேசியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்ட மைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கைது செய்யப்படலாம். என சமூக வலைத்தளங்களில் பரவலாக தக வல்கள் வெளியாகி வருகின்றது. 

நேற்று வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தொடா்பாக கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளதுடன், “நீ” என ஒருமையில் விழித்தும் பேசியுள்ளாா். 

இந்நிலையில் சுமந்திரன் அவ்வாறு பேசியிருக்க கூடாது எனவும், என்ன இருந்தாலும் மைத்திாிபால சிறிசேனா இந்த நாட் டின் ஜனாதிபதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களே கருத்து தொிவித்துள்ளனா். இவ்வா றான நிலமைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, 

நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கைது செய்யப்படலாம். எனவும், கைது செய்யப்படவாரா? எனவும் சமூக வ லைத்தளங்களில்  எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு