நந்திக்கடல் பறிபோனது.. எதிா்ப்புக்களையும் மீறி வனஜீவராசிகள் திணைக்களம் உள்நுழைவு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீர் ஏரியினை இயற்கை ஒதுக்கிடமாக வர்த்தகமானி மூலம் அறிவித்து அதனை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் 05.11.18 அன்று வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வர்த்தக மானி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் பகுதி மற்றம் நாயாற்று கடல் நீர் ஏரி ஆகியன இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த பகுதி இயற்கை ஒதுக்கிடம் என்றும் அங்கு எதுவித மாற்றங்களும் செய்யமுடியாது என்றும் மக்கள் அங்கு செல்ல முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.