தமிழ் இனம் சந்தித்த அத்தனை அழிவுகளுக்கும் காரணமானவர்களை அரியணை ஏற்றுவதற்கு துணைபோகும் அளவுக்கு அற்பர்கள் அல்ல நாம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் இனம் சந்தித்த அத்தனை அழிவுகளுக்கும் காரணமானவர்களை அரியணை ஏற்றுவதற்கு துணைபோகும் அளவுக்கு அற்பர்கள் அல்ல நாம்..

அரசியல் கைதிகள் விடுவிப்புஇ அமைச்சுப் பதவி என்னும் மாய வார்த்தைகளுடன் எம்மை மகிந்த அணி இழுக்கும் முயற்சியில் நாமல் ராஜபக்ஸ தொடர்பு கொள்ளும் நிலையில் முள்ளிவாய்க்கால் அவலத்தை விலை பேசும் நிலையின் நான் இல்லை. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,

தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் பிரந்த மண்ணில் பிறந்த என்னையும் தமது வலையில் வீழ்த்த முடியுமா என முயற்சிக்க எனக்கும் நாமல் ராயபக்ஸ தொலைபேசி. அழைப்பு எடுத்தார். அதன்போது அவர் எமது மக்கள் சார்பில்  அளித்த ஒரே வாக்குறுதி சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது மட்டுமே.

இவற்றைத் தவிர தமிழ் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைக்காத நிலையில் நான் அவரிடம் பகிரங்கமாகவே தெரிவித்தேன் அரசியல் சாசனத்திற்கு முரணாக பிரதமராக வந்த உங்கள் தந்தை முதலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சணைக்கு என்ன தீர்வை வைக்கப்போகின்றீர்கள் என்பதனை பகிரங்கமாக கூறுங்கள் அதனை கட்சி ஆராயும் என்றேன்.

அதனை விட்டு அமைச்சுப் பதவிக்கோ பணத்திற்கோ விலைபோகும் தன்மை கொண்டவன் அல்ல மகிந்தவின் பெயரைக் கேட்டாலோ அல்லது மாவட்டத்தின் எப் பகுதிக்குச் சென்றாலும் கை இல்லாதவர்களும், கால் இல்லாதவர்களுமாக போரின் அவலத்தை சுமந்து நிற்க அந்த அவலத்தை தந்தவனை அரியனை ஏற்றும் அற்பர்கள் இல்லை.

இதனால் இவர்களின் தொல்லை காரணமாகவே தொலைபேசிகளை நிறுத்தி வைக்கும் நிலமையில் உள்ளேன். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு