பஸீஜ்' துணை இராணுவப் படையி பாரிய விரிவாக்கம் - ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா மொஜ்தபா கமேனி!

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்த 'பஸீஜ்' துணை இராணுவப் படைக்குப் "புதிய பிறப்பும்" பாரிய விரிவாக்கமும் அவசியம் என ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா மொஜ்தபா கமேனி வியாழக்கிழமை (நவம்பர் 26) அழைப்பு விடுத்துள்ளார்.
'பஸீஜ் வாரத்தை' முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், "ஒவ்வொரு ஈரானியரும் ஒரு பஸீஜ் உறுப்பினர்" என்ற இலக்கை நனவாக்கும் வகையில், சமூகத்தில் இப்படையின் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கத் தடைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிராந்தியப் போர்ச் சூழலுக்கு மத்தியில், முறையான உறுப்பினர்களாக இல்லாத போதிலும் இப்படையின் சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஆயுதப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து இந்த அமைப்பை நவீனமயமாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் பஸீஜ் படையின் புதிய தளபதியாக ஹொசைன் தாயேப் நியமிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விரிவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது




