ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல் கடல் கண்ணிவெடியில் சிக்கி சேதம் – ஈரான்!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடல் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.
குறித்த கப்பல், நீரிணையைக் கடப்பதற்கு முன்னர் தனது இருப்பிடத்தைக் கண்டறியும் கண்காணிப்பு அமைப்புகளை முடக்கியிருந்ததாகவும், ஈரான் அனுமதிக்காத கடல் வழிப்பாதையில் பயணிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கப்பல் கடல் கண்ணிவெடியில் மோதி வெடித்ததாக IRGC தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் கடல்சார் வழிசெலுத்தல் விதிமுறைகளை மீறும் பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என ஏனைய கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




