இங்கிலாந்தில் நிலவிய கடும் வெப்பம் - நடப்பாண்டின் இதுவரையில் 5,258 பேர் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக நடப்பாண்டு கோடைகாலத்தில் இதுவரை 5,258 பேர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, 2016ஆம் ஆண்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெப்பம் தொடர்பாகப் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு 2,985 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் உயிரிழப்பு எண்ணிக்கை அதனை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜூன் 21 முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 2,401 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை எட்டியிருந்தது.
மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 41 நாட்களைக் கொண்ட ஏழு வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாகக் கடும் வெப்பத்தின் கால அளவு, நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் சுகாதாரப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் எச்சரித்துள்ளது.




