விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் – தெற்காசிய போட்டிகள் ஒத்திவைப்பு!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 14 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திவைப்பு தொடர்பில் பாகிஸ்தான் ஒலிம்பிக் குழு, தெற்காசிய நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் சவூதி அரேபியாவில் ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளமையே இதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு விழாவுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.




