5 ஆண்டு தேசிய மனித உரிமைகள் செயல் திட்டத்தின் வரைவுக்கு கத்தார் அமைச்சரவை ஒப்புதல்!

2026 முதல் 2030 வரையிலான தேசிய மனித உரிமைகள் செயல் திட்டத்தின் வரைவுக்கு கத்தார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், கத்தார் மின்சாரம் மற்றும் குடிநீர் நிறுவனமான KAHRAMAA-வின் நிர்வாகத்தை மறுசீரமைக்கவும், சவுதி அரேபியாவுடன் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கூட்டுத் திட்டத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.




