மலையக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு

ஆசிரியர் - Admin
மலையக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு

மலையக மக்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை(30-10-2018) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல்-11.30 மணியளவில் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருமளவு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வேண்டும் 1000 ரூபா”, “மக்கள் உழைப்பைச் சுரண்டாதே” ,”மலையகத் தோட்டத் தொழிலாளி வயிற்றில் அடிக்காதே”, “கெளரவமான வாழ்க்கைக்கு வழிவிடு” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் மலையக மக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு