மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது தாக்குதல்..

யாழ்.வரணி முள்ளி பகுதயில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

வரணியை சேர்ந்த ஜெயக்குமார் ஜெயபவன் (வயது 33) எனும் இளைஞர் நெல்லியடி பகுதியில் வேலை செய்து வருகின்றார். கடந்த சனிக்கிழமை இரவு வேலை முடிந்தது இரவு 8 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வேளை அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நாலு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். 

அதன் போது குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளிலை நிறுத்தாது தொடர்ந்து பயணித்த வேளை இரும்பு கம்பியால் மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கினை (ஹெட் லைட்ட) அடித்து சேதமாக்கி உள்ளனர். அதன் போதும் அவர் நிற்காது தொடர்ந்து ஓடிய போது தலைக்கவசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அதனால் நிலைகுலைந்து கீழே விழுந்து அருகில் இருந்த பற்றைக்காடுகளுக்குள் ஓடி ஒழிந்துள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். 

அதன் பின்னர் தாக்குதலுக்கு இலக்கான குறித்த இளைஞன் தனது நண்பர்களுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தை அடுத்து நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞனை காப்பற்றி சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனால் நெல்லியடி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு