SuperTopAds

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மீது பெண் வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு -

ஆசிரியர் - Editor II
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மீது பெண் வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு -

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டில் தன்னை தடுத்து வைத்ததாக அச்சுறுத்தலுக்கு இலக்காகிய பெண் வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் புளொட் அமைப்பின் சார்பாக இளங்கோபுரம் விசுவமடுவினை சேர்ந்த மஞ்சுளா என்பவர் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கட்சி அலுவலகத்தில் நேற்று வேட்பாளர் கையெழுத்திட சென்றபோது தன்னை தடுத்து வைத்ததாக குறித்த பெண் வேட்பாளர் இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ள அதேவேளை பெண் வேட்பாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவ அறிக்கையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பெண் வேட்பாளரை தடுத்து வைத்திருந்தவர் மீது உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.