அண்ணன்,அக்கா,தம்பி மூவருக்கும் அபராதம். விநோதமான தீர்ப்பளித்த பருத்துறை நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
அண்ணன்,அக்கா,தம்பி மூவருக்கும் அபராதம். விநோதமான தீர்ப்பளித்த பருத்துறை நீதிமன்றம்..

இரு தடவைகளும் பொலிஸாரின் சமிக்கையினை மீது மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற சகோதரர்கள் இருவருக்கு  13ஆயிரம் மற்றும் 21ஆயிரம் ரூபா அபராதம் விதித்த பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு 5ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.

இந்த வினோதமான வழக்கு நேற்று முன்தினம் பருதித்துறை நீதிமன்றில் இடம்பெற்றது. கடந்த மாதம் 16ம் திகதி மோட்டார் சைக்கிளின் ஓட்டுனராக இருந்த அண்ணண் வல்வெட்டித்துறை பொலிஸார் உடுப்பிட்டி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளினை மறிக்க முற்பட்ட போது பொலிஸாரின் சமிக்கையினை மீது ஓடியுள்ளார். 

மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்திருந்த போக்குவரத்து பொலிஸார் இவ் இலக்கத்தினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக அறிவதற்கு அறிக்கை சமர்பித்திருந்தனர். இந் நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளினை வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த மாதம் 10ம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து மறித்த போது 

அன்றையதினம் ஓட்டி சென்றவர் தம்பி எனவும், அவர் பொலிஸாரின் சமிக்கையினை மீறி ஓடி சென்ற போது பொலிஸார் குறித்த ஓட்டுனரை வீடு சென்று கைது செய்திருந்தனர். இந் நிலையில் இவர் அதிகவேகம், சாரதி அனுமதிபத்திரம் மற்றும் பொலிஸாரின் கட்டளையினை மீறி மோட்hர் சைக்க்கிள் ஓட்டி சென்றமை கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதனை விட கடந்த மாதம் 16ம் திகதி மோட்டார் சைக்கிள் ஓடியவரை கண்டு பிடிக்க பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையில் குறித்த சம்பவம் இரண்டும் ஒரே மோட்டார் சைக்கிள் இலக்கம் என்பதுடன், ஓடிய இருவரும் இமையாணண் பகுதியினை சேர்ந்தவர்கள் ஆவார். 

அண்ணணையும் தம்பியினை இன்று பருதித்துறைநீதிமன்றில் முற்படுத்திய போது அண்ணணுக்கு 13ஆயிரம் ரூபாவும், தம்பிக்கு 21ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது. இந் நிலையில் சாரதி அனுமதிபத்திரம் இல்லாத நபருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியதாக கூறப்படும் வண்ணார் பண்ணை பகுதியினை சேர்ந்த பெண்ணுக்கு 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு