SuperTopAds

பாடசாலையையும் விட்டு வைக்காத வனவள திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலையையும் விட்டு வைக்காத வனவள திணைக்களம்..

மக்களின் வாழ்விடம் வாழ்வாதார இடங்களை அபகரித்துள்ள வனவளத் திணைக்களம் வவுனியா வடக்கில் ஓர் பாடசாலையும் விட்டு 

வைக்காத தன்மையே காணப்படுவதாக பிரதேச ஒருங்ணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நாவலர் பண்ணைப் பகுதியில் போரிற்கு முன்னர் 250 குடும்பங்கள் இருந்தனர். ஆனால் தற்போது எவருமே இல்லை. 

அவ்வாறு அப்பகுதி இன்று எவரும் அற்றுக் கானப்படுவதற்கு முக்கிய காரணம் வனவளத் திணைக்களமே காரணம். 1990ம் ஆண்டு இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இன்று 

30 ஆண்டுகாலம் காடு வளர்ந்து அவை அடர்ந்த காடுபோன்று காட்சியளிக்கின்றது. இவ்வாறு காணப்படும் பிரதேசம் முழுவதும் தமது 

ஆளுகைப் பிரதேசம் என வனவளத் திணைக்களம் உரிமைகோரி அப்பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கின்றது.

இதனால் அப் பகுதியில் இருந்த 250 குடும்பங்களும் நிலம் இன்றி நடுத்தெருவில் அலைகின்றனர். 

இவர்களிற்காக அமைக்கப்பட்ட பாடசாலையான காஞ்சுரம்மோட்டை அ.த.க.பாடசாலை இன்று பாலடைந்தே காணப்படுகின்றது. 

இருப்பினும் பாடசாலை வளாகம் மட்டும் இரு தடவை துப்பரவு செய்யப்பட்டுள்ளபோதும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் அடையாளச் சின்னமாகவும் உள்ளது. 

எனவே நாவலர் பண்ணையில் வாழ்ந்த மக்களை மீண்டும் அதேபகுதியில் குடியமர்த்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். எனக் கோரிக்கை விடப்பட்டது. 

இதன் பிரகாரம் நாவலர் பண்ணையில் இருந்த மக்களை அங்கே குடியமர்த்த வேண்டும் எனவும் அவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக காஞ்சுரம்மோட்டை பாடசாலையை மீண்டும் இயக்க வேண்டும். 

எனவும் நேற்றைய தினம் பிரதேச செயலகத்தில் இடம்மெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊஞ்சல்கட்டி மருதோடை கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இப் பகுதிகள் இன்று அழிவடையும் பிரதேசமாக கானப்படும்போது எம்மை அனுமதிக்காத வனவளத் திணைக்களமே நாளை வேறு 

குடியேற்றங்களிற்கு மட்டும் நிலத்தை வழங்குவார்கள். எனவே அப்பகுதியை வனவளத் திணைக்களம் விடுவிக்க வேண்டும். எனவும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களை அங்கேயே குடியமர்த்த வேண்டும் 

என்ற விடயத்தினை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என ஒலுமடு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மு.பூபாலசிங்கம் தெரிவித்தார். இதன் பிராகரம் மேற்படி விடயம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.