கயிறு அறுந்து விழுந்து,மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஏணி பொருத்தகூடாது..
வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஏணி அறுந்து விழுந்தாலும் பரவாயில்லை.
ஆனால் தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்து மூலமான அனுமதி இன்றி புதிய ஏணி பொருத்தக்கூடாது என அடம்பிடித்த பொலிசார் அந்த ஏணியை தயாரித்து வழங்க கூடாது.
என அதனை தயாரிக்கும் ஒட்டுக்கடை உரிமைநாளருக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆலய நிர்வாகம் பகிரங்க புற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வந்த பூசை வழிபாடுகளைத் தடை செய்த தொல்பொருள் திணைக்களத்தினர் அப் பகுதியில் ஓர் புத்த கோயிலை அமைக்க முயன்ற
குழுவினருக்கு அனுமதி வழங்க முயற்சியை அப்பகுதி மக்களும் ஆலய நிர்வாகமும் இணைந்து தடுக்க முற்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் ஆலய நிர்வாகத்தை
அழைத்து முதலில் அப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுயதனால் அப் பகுதி மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் வழிபட அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதன் பின்னர் பலரும் அப்பபுதிக்கு நேரில் சென்று வந்த நிலையில் இம்மாத ஆரம்பத்தில் விமல் வீரவன்சாவின் கட்சியினரும் நேரில் பார்வையிட்டுச் சென்றனர்.
இதன் பின்னர் அண்மைக்காலத்தில் அதிகமானோர் அப்பகுதிக்குச் சென்று மலையில் உள்ள ஆலயத்திற்கு ஏறிச் சென்றமையினால் அங்கே முன்னர் அமைக்கப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்தது.
இதனால் அங்கே வரும் அனைவரின் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் ஆகிய எம்மால் ஓர் ஏணிப் படியினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
இதனை மலைப் பகுதியில் பொருத்த முயன்றதனையடுத்தே பொலிசார் தலையிட்டு கடந்த 6ம் திகதி மீண்டும் ஆலய நிர்வாகத்தினை பொலிஸ் நிலையம் அழைத்தனர்.
பொலிசாரின் அழைப்பை ஏற்று பொலிஸ் நிலையம் சென்றபோது தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்து மூலமான அனுமதி இல்லாது ஏணியை பொருத்த வேண்டாம்.
எனப் போலிசார் உத்தரவிட்ட நிலையில் ஆலய அபிவிருத்தி எதனையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அந்த மலைக்குச் சென்றுவரும் ஏணி நீண்டகாலம் என்பதனால் அறுந்துவிழும் நிலமை ஏற்படும் என சுட்டிக்காட்டியபோதும் பொலிசார் அதனை ஏற்கவில்லை.
இவை இவ்வாறிருக்க அந்த ஏணியை அமைக்க 6 லட்சம் ரூபா கடன்பட்டு பணிகளை முன்னெடுத்த நிலையில் எம்மைத் தடுத்த பொலிசார் ஏணியை ஒட்டுவதற்கு கொடுத்த கடைக்கும் சென்று அதனை அமைக்ககூடாது .
என உத்தரவிட்டமை எந்தவகையில் நியாயமானது. இதனை கண்டிப்பதோடு ஏணி அமைக்க பொலிசார் தடை விதிக்ககூடாது. எனவும் நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரினர்.
குறித்த விடயத்தினை ஆராய்ந்த ஒருங்கிணைப்புக் குழு படியை ஒட்டுவதற்கு கடை உரிமையாளரை தடைபோட முடியாது.
அதனை உடன் அமைக்கலாம் எனவும். அவ்வாறு அமைக்கும் ஏணியை ஆலயத்தில் பொருத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும். எனவும் தீர்மானித்தனர்.