வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சி ஆரம்பிக்கிறார் - புலனாய்வுப் பிரிவுகள் அலேட்

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சி ஆரம்பிக்கிறார் - புலனாய்வுப் பிரிவுகள் அலேட்

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், புதிய கட்சி ஒன்றை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கிறார் என்றும் அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட புலம்பெயர் சக்திகள் நிதியுதவியளிக்கின்றன என்று கொழும்பு உயர்மட்டத்துக்கு நியூயோர்க் தூதரகத்திலிருந்து புலனாய்வுத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததும், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புக்களைச் சேர்ந்த சிலரையும் இணைத்து இந்தக் கட்சியை அவர் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியான அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மூலம் அந்தக் கட்சியில் போட்டியிட்ட அவர், கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு உள்பட்டு தமிழ் அரசுக் கட்சியிலிருந்து புறக்கணிப்பட்டார். அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சிலருடனும் அவர் இணைந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

இதனால் அவர் மீது தமிழ் அரசுக் கட்சி தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்தது. அத்துடன், தமிழ் அரசுக் கட்சிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இடையே ஏற்பட்ட முரண்படு நிலையில் அனந்த சசிதரன் முதலமைச்சரின் பக்கம் நின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு