யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்

ஆசிரியர் - Admin
யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்

ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரியின் சாதுரியமான நடவடிக்கையால் யாழ்.குடாநாட்டில் பாரிய ரயில் விபத்துத் தவிர்க்கப்பட்டது. இந்த விடயம் தற்போது யாழில் பரவலாகப் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று(14) பிற்பகல் யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தபால் ரயிலும், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயிலும் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரே தடத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ரயில் நிலையக் கட்டுப்பட்டு அதிகாரி உடனடியாகச் செயற்பட்டு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலை கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடைநிறுத்தியதுடன் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த ரயிலை கோண்டாவில் ரயில் நிலையத்திலும் இடைமறித்துத் தடம் மாற்றுமாறு பணித்துள்ளார்.

சில நிமிட தாமதத்தின் பின்னர் இரு ரயில்களும் பயணத்தைத் தொடர்ந்துள்ளன. இதனால்,பாரிய விபத்துத் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துரிதமாகச் செயற்பட்டுப் பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு