ஈரான் மீது மற்றொரு தலைமைத்துவத்தை அழிக்கும் தாக்குதலை நடத்த அமெரிக்கா முயற்சிக்கும் - சர்வதேச ஊடகங்கள் தகவல்!

தங்கள் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ள ஒருவர் அதிகாரத்திற்கு வருவதை உறுதிசெய்ய, ஈரான் மீது மற்றொரு தலைமைத்துவத்தை அழிக்கும் தாக்குதலை நடத்த அமெரிக்கா முயற்சிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
போரின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் நோக்கமும் அதுவாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் கருத்துகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி -
எந்தவொரு புதிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்; அது ஒரு 'இறுதிப் போர்' என்ற நிலைக்குச் சென்றாலும் சரி.
முந்தைய இரண்டு போர்களிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு, எங்கள் உத்திகளை மாற்றியமைத்துள்ளோம்.




