ஆவணங்களை 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் - நெதர்லாந்துக்கு இஸ்ரேல் காலக்கெடு!

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் இயங்கும் நெதர்லாந்து நாட்டு ராஜதந்திரிகள், தங்களுடைய இஸ்ரேலிய தூதரக அடையாள ஆவணங்களை 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் அரசு கெடு விதித்துள்ளது.
நெதர்லாந்து அரசு இஸ்ரேலிய சட்டவிரோத குடியிருப்புகளின் பொருட்களுக்கு தடை விதித்ததற்கு பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




