கொட்டித் தீர்த்த கனமழை முடங்கியது பேங்கொக்!

தாய்லாந்தின் பேங்கொக் தலைநகரில் (26) பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பேங்கொக் நகரம் தொடர்ந்தும் பேரிடர் எச்சரிக்கை நிலையில் உள்ளதால், அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக அந்த வெளிநாட்டு ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலங்களில் பேங்கொக் நகரில் 300 மில்லிமீற்றருக்குக் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட 4,200 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




