அமெரிக்க B-1 வானுார்திகள் இயங்கும் பகுதியில் அசாதாரண நிலை!

பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையரில் அமெரிக்க வானுார்திப்படை பயன்படுத்தும் முக்கிய வானுார்திப்படை தளத்திற்கு அருகில் இடம்பெற்ற அசாதாரண சம்பவமொன்றை அடுத்து, வெடிபொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் 'முக்கிய பாதுகாப்பு சம்பவம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெல்ஃபோர்ட் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வானுார்திப்படையின் 'குளோபல் ஸ்டிரைக் கமாண்ட்' படையினரால் பயன்படுத்தப்படும் 'ஃபேர்ஃபோர்ட்' அரச வானுார்திப்படை தளத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க B-1 குண்டுவீச்சு வானுார்திகள் இந்த தளத்திலிருந்தே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் சிறப்பு வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் பிரிவு (EOD) மூலம் சம்பவ இடத்தில் இருந்த பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.




