SuperTopAds

கொங்கோ இராணுவ வானூர்தி விபத்து - 14 பேர் மரணம்!

ஆசிரியர் - Editor IV
கொங்கோ இராணுவ வானூர்தி விபத்து - 14 பேர் மரணம்!

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தென்மேற்கு பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று, குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தின் போது வானூர்தியில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிக்விட் நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது வானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் வானூர்தியை தரையிறக்குவதற்கான ஓடுபாதை இல்லாத நிலையில், குடியிருப்புகள் அமைந்திருந்த பகுதியில் வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதாக குவாங்கோ மாகாண பிரதி ஆளுநர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio