SuperTopAds

பாலஸ்தீன மக்களுக்குத் தனது பகிரங்க ஆதரவை தெரிவித்த அமெரிக்கப் பாடகர் டான் ரெனால்ட்ஸ்!

ஆசிரியர் - Editor IV
பாலஸ்தீன மக்களுக்குத் தனது பகிரங்க ஆதரவை தெரிவித்த அமெரிக்கப் பாடகர் டான் ரெனால்ட்ஸ்!

பிரபல 'இமேஜின் டிராகன்ஸ்' இசைக்குழுவின் முன்னணி அமெரிக்கப் பாடகரான டான் ரெனால்ட்ஸ்  தனது நேரடி இசை நிகழ்ச்சியொன்றின் போது பாலஸ்தீனக் கொடியை ஏந்தியவாறு மேடையேறி பாலஸ்தீன மக்களுக்குத் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

காசாவில் நிலவும் மனிதநேயப் பேரவலங்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த ஆதரவுச் செயலை முன்னெடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்களது இசை மேடைகளைப் பயன்படுத்தி உலகளாவிய மனித உரிமைச் சிக்கல்களுக்குக் குரல் கொடுத்து வரும் நிலையில், டான் ரெனால்ட்ஸின் இந்த நடவடிக்கை ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்று வருகின்றது.

Radio