ஈரானிய விமான சேவைகளை நிறுத்திய இரு நாடுகள் - மத்திய கிழக்கின் அனைத்து விமான செயல்பாடுகள் முடக்கப்படும் - ஈரானின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் ஈரானிய விமான சேவைகளை அதிரடியாக நிறுத்தியுள்ளன.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.




