SuperTopAds

சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்பு நிகழ்வில் ஜெட் விமான சத்தத்தால் முகம் சுளித்த டிரம்ப்!

ஆசிரியர் - Editor IV
சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்பு நிகழ்வில் ஜெட் விமான சத்தத்தால் முகம் சுளித்த டிரம்ப்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டன் அருகே உள்ள விமானப்படைத் தளத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

கடந்த 64 ஆண்டுகளில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக விமான தளத்திற்கே சென்று வரவேற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வின்போது இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ விமானங்கள் வானில் பறந்து சென்றன.

அப்போது அதிவேக போர் விமானம் பயங்கர சத்தத்துடன் மிகக் குறைந்த உயரத்தில் பறந்ததால், எதிர்பாராத சத்தத்தைக் கேட்டு ஜனாதிபதி டிரம்ப் அதிர்ச்சியில் முகம் சுளித்தார்.

ஆனால், அருகில் நின்ற சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக நின்ற காட்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது.

Radio