சீனாவின் முதல் ‘டிஜிட்டல் மெட்ரோ’ பெர்லினில் இருந்து ஆரம்பம்!

சீனாவில் உருவாக்கப்பட்ட VELLINK எனப்படும் நாட்டின் முதல் டிஜிட்டல் மெட்ரோ ரயில், ஜேர்மனியின் பெர்லினில் ஆரம்பமான 2026 சர்வதேச போக்குவரத்து தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Embodied AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விரிவான உணர்திறன் வலையமைப்பு, தனியுரிம AI அல்கோரிதம்கள் மற்றும் அதிவேக தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை இந்த ரயிலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ரயில் தன்னைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து, தகவல்களை பகுப்பாய்வு செய்து முடிவுகளை எடுத்து, அதற்கேற்ப செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான முறையில் வழங்கப்படும் கட்டளைகளை மாத்திரம் பின்பற்றுவதற்குப் பதிலாக, ரயிலின் இயக்கத்தை தானாகவே மேம்படுத்தும் திறனை VELLINK பெற்றுள்ளது.
மேலும், இலகுரகப் பொருட்கள் மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு கொண்ட அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரயிலின் எடை சுமார் 18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டுமொத்த ஆற்றல் சேமிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும், முழு வாழ்க்கைச் சுழற்சிக்கான கார்பன் வெளியேற்றம் சுமார் 15 சதவீதம் குறைவாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




