SuperTopAds

சட்ட விரோத தொழிலாளிகளுக்கு 1 இலட்சம் ரியால் அபராதம் - சவுதி அதிரடி!

ஆசிரியர் - Editor IV
சட்ட விரோத தொழிலாளிகளுக்கு 1 இலட்சம் ரியால் அபராதம் - சவுதி அதிரடி!

சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும்.

தன் கீழ் உள்ள தொழிலாளி தனக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ வேலை செய்ய அனுமதிக்கும் நிறுவனங்கள், மற்றும் வேறு ஸ்பான்சர் கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைப்பவர்களுக்கும் இதே தண்டனை பொருந்தும்.

மற்ற தண்டனைகள்: 5 ஆண்டுகள் வரை புதிய தொழிலாளர்களை ரெக்ரூட் செய்ய தடை, நிறுவனத்தின் பெயர் பத்திரிகையில் வெளியிடப்படும், பொறுப்பான மேலாளருக்கு 1 ஆண்டு வரை சிறை. மேலாளர் வெளிநாட்டவராக இருந்தால் நாடு கடத்தப்படுவார்.

அபராதம், பிடிபடும் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல மடங்காகும்.

இது புதிய சட்டம் இல்லை, ஏற்கனவே இருக்கும் Iqama / Labor / Border Security விதிகளை மீண்டும் கடுமையாக அமல்படுத்த உள்துறை அமைச்சகம் கொடுத்த எச்சரிக்கை. பொதுமக்கள் விதிமீறல்களை 911 (Makkah, Madinah, Riyadh, Eastern Province) மற்றும் 999 (மற்ற பகுதிகள்) எண்ணில் புகார் செய்யலாம் என்றும் சொல்லியுள்ளது.

Radio