காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஐ.நாவில் கடும் கண்டனம் தெரிவித்த துருக்கி!

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் அர்துகான், காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இஸ்ரேல் இனப்படுகொலை மனநிலையுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
உலக அமைதியைப் பாதுகாக்க ஐநா சபை தவறிவிட்டதாகவும் அவர் சாடினார்.




