SuperTopAds

மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் மண்டியிடாது - ஐ.நாவில் ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் மண்டியிடாது - ஐ.நாவில் ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு!

அமெரிக்காவில் வைத்து உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, சர்வதேச அளவிலான தடைகள், அதிகரித்து வரும் அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் தலைவணங்கவோ அல்லது மண்டியிடவோ மாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​அழுத்தங்கள் அதிகரிக்கும் போது ஈரானிய மக்களின் எதிர்ப்புணர்வே மேலும் அதிகரிக்கும் என்பதை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்துவரும் நிலையில், ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவது பெரும் முரண்பாடானது எனச் சாடினார்.

Radio