SuperTopAds

டொனால்ட் ட்ரம்பின் பேச்சு உள்நாட்டு விளம்பரம் மட்டுமே- ஈரான் நகைப்பு!

ஆசிரியர் - Editor IV
டொனால்ட் ட்ரம்பின் பேச்சு உள்நாட்டு விளம்பரம் மட்டுமே- ஈரான் நகைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள்.பொதுச் சபையில் விடுத்த அச்சுறுத்தல்கள் அனைத்தும் "உள்நாட்டு விளம்பர உத்தி"மட்டுமே என்று ஈரானின் இராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை ஆகியவை கூட்டாகத் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய ட்ரம்ப் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடலாமா அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரலாமா என்று தான் பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஈரானிய இராணுவத்தின் பொதுப் படைப்பிரிவு மற்றும் புரட்சிக்கர காவல்படையின் 'காதம் அல்-அன்பியா' மையத் தலைமையகம் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதில், ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் பேச்சு, ஈரான் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் சந்தித்துள்ள மூலோபாய முட்டுக்கட்டையையே பிரதிபலிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவின் உள்நாட்டு விளம்பர நோக்கத்திற்காகவே பேசப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், நாட்டின் நலனுக்காகவும் சாத்தியமான நீண்டகால மோதல்களை எதிர்கொள்ளவும் ஈரானியப் படைகள் தொடர்ந்து முழுப் போர்க்களத் தயார்நிலையிலேயே இருக்கும் என புரட்சிக்கர காவல்படை சுட்டிக்காட்டியுள்ளது.

Radio