மனிதரைக் கொல்வதில் சோர்வடையாத தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் - துருக்கிய அதிபர் எர்டோகன்!

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில், துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையின்போது, அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதில் சற்றும் சோர்வடையாத ஒரு தீவிரவாத அமைப்பாக இஸ்ரேலை எர்டோகன் வெளிப்படையாகச் சாடினார்.
மேலும், காசாவைத் திட்டமிட்ட முறையில் குழந்தைகளுக்கான ஒரு கல்லறையாக இஸ்ரேல் மாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல் என்ற தனது கடமையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஐக்கிய நாடுகள் சபை தள்ளப்பட்டுள்ளதை காசா, லெபனான் மற்றும் சூடான் ஆகிய இடங்களில் நிலவும் நெருக்கடிகள் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, உலகளாவிய சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உடனடி கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எர்டோகன் வலியுறுத்தினார்




