SuperTopAds

நியூயார்க் நகரைச் சென்றடைந்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி!

ஆசிரியர் - Editor IV
நியூயார்க் நகரைச் சென்றடைந்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி!

பங்கேற்பதற்காக, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தலைமையிலான உயர் மட்டத் தூதுக்குழு அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சென்றடைந்துள்ளது.

ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை ஐ.நா-விற்கான ஈரானின் நிரந்தர பிரதிநிதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றதாக 'IRNA' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூயார்க் வரும் வழியில் தோஹாவிற்கு விஜயம் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர், கத்தார் நாட்டின் உயர் அதிகாரிகளுடன் பிராந்திய சூழ்நிலைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே, இக்கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று (22) நியூயார்க் வந்தடைந்ததோடு , தனது விஜயத்தின் போது உலகத் தலைவர்களுடன் இருதரப்பு தூதரகப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

Radio